1. பெரும்பாலும்
அழைப்பை துண்டிப்பதற்கு
சற்று முன்புதான்
பேசப்படுகின்றன
அழைத்ததற்கான
நிஜ காரணங்கள்..!
2. பள்ளங்கள் பார்த்து,
மெதுவாய் சென்று
சேர்க்கும் வரை
உதவி செய்த மனதிருப்தி
ஏற்படுவதேயில்லை
வயதானவர்களுக்கு
‘லிப்ட்’ கொடுக்கும் போது..!
3. தனியாக வந்திருக்கும்
சிறுவனிடம்
‘வேலைக்கு போகிறவர்’
அவருக்கு வெட்டிவிட்டு
வெட்டிவிடுகிறேன்’
என்று சொல்லி
என்னை அமர வைக்கிறார்,
தந்தையுடன்
வந்த சிறுவனுக்காக
என்னிடம்
‘பசியோடிருப்பான்’
‘சிறுவனுக்கு வெட்டிவிட்டு
வெட்டிவிடுகிறேன்’
என்று அனுமதி கேட்ட
முடி திருத்துபவர்..!
4. ‘சின்ன பையன்
உனக்கு என்ன தெரியும்
என்று யோசிக்காமல்
உன்னிடம் போய்
கேட்டேன் பாரு’
என்று
எளிதில் சொல்லிவிடுவார்கள்
என்பதற்கு பயந்தே
பெரியவர்களின் விவாதத்திற்கு
துணைக்கழைக்கப்படும் போது
ஆமோதித்து
தலையாட்டிவிடுகிறார்கள்
சிறுவர்கள்..!
5. பள்ளி சென்றுவிட்டு
மாலையில் விற்கும் சிறுவன்
என்பதற்காக வாங்கிய
இரண்டு ரூபாய்
முந்திரி பிஸ்கட்-ல்
முந்திரியையும்
தேடத்தான் செய்கிறது மனது..!
-யோவ்
(இயன்றவரை கன்னம் கவிதைத்தளத்தில் இனி தினமும் கவிதைகள் வெளிவரும் இயலாத போது ஒன்று விட்டு ஒருநாளாவது கவிதைகள் வெளிவரும்)


நல்ல கவிதை !
ReplyDeleteநன்றி..நண்பரே..
Deleteகுட்டீஸ்களோடு நிறையவே விளையாடுகிறீர்கள்போல.அத்தனையும் அனுபவம்.உங்கள் கவிதைகளைத் தொடராகக் காணமுடிகிறது.சந்தோஷம்.இனி நிப்பாட்டவேணாம் !
ReplyDeleteஎன் கவிதைப் பக்கமும் வாங்களேன் !
உண்மைதான் தோழி, நிச்சயம் வருகிறேன்..
Deleteஅருமையான கவிதைகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி.. ஐயா,
Deleteமுதல் இரண்டும் வெகு அருமை!
ReplyDeleteநன்றி..நண்பரே..
ReplyDeleteபள்ளிக்கூட நினைவுகள் தொடருக்கு உங்களை அழைத்திருக்கிறேன்!தொடரவும்.
ReplyDelete1 And 5, good ones:)
ReplyDelete