Tuesday, May 13, 2014

திரைப்படமான 'பீச்சாங்கை' கவிதைதினமலர்

'சாலையோரம்' திரைப்படம் - ஒரு துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகளுக்கும் காதல் வருகிறது. காதல் ஜெயித்ததா என்பதுதான் படத்தின் கரு. 'மலம் அள்ளும் தொழிலாளிக்கு எது பீச்சாங்கை?' என்ற ஒரு கவிதை படித்தேன். அதுதான் இந்த சப்ஜெக்டில் படம் பண்ண தூண்டியது - படத்தின் இயக்குனர் மூர்த்தி கண்ணன். முழு விபரமும் இயக்குனரின் பேட்டியும் நேற்றைய 18.04.2014 தினமலர் 4 பக்கத்தில் வெளிவந்துள்ளது.


TIMES OF INDIA

"I read a poem, Peechaankai, in which there was a line that said 'there is no left or right hand for a ragpicker'. People don't really know what kind of a life these people lead. And this line in the poem inspired me to do this film. " says Moorthykannan.


http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Saalaiyoram-revolves-around-the-life-of-a-rag-picker/articleshow/34113028.cms

மேலதிக தகவலுக்கு...
https://www.facebook.com/peechangai 

பீச்சாங்கை கவிதையை வாசிக்க..
http://www.kannam.com/2010/10/blog-post_8724.html                                                                   
முக நூல் 
October 25, 2012


நாவலாசிரியர். பட்டுக்கோட்டை பிரபாகர் சார் தனது முகநூல் சுவற்றில் இவ்வாறு பதிந்திருக்கிறார்.

''விகடனில் படித்த கவிஞர் சதீஷ்பிரபு (யோவ்) எழுதிய ' மலம் அள்ளுபவனின் கைகளில் எந்தக் கை பீச்சாங்கை?' எனும் கவிதை மனதைப் பிசைந்து கொண்டிருக்கிறது''


https://www.facebook.com/pattukkottai.prabakar
இந்தியா முழுவதும் மலத்தை அள்ளி தலையில் சுமந்து அகற்றும் பணியில் ஆறு லட்சத்து ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 22 ஆயிரத்து 327 பேர் மரணமடைந்துள்ளனர்

'மலம் அள்ளும் துப்புரவு
தொழிலாளிக்கு
எந்தக் கை
பீச்சாங்கை'

என்று நெற்றிப்பொட்டில் அறைந்தது போல கேட்கிறது ஒரு புதுக்கவிதை. ஆனால் மோடியோ இது ஒரு ஆன்மீக அனுபவம் என்கிறார்.

(சாதி-மதம் வர்க்கம் எனும் நூலில் சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினர் கே. வரதராஜன். வெளியீடு: பாரதி புத்தகாலயம். படத்தில் வலது ஓரமாக இருப்பவர்)

தீக்கதிர், புத்தக விமர்சனம்


புத்தகத்தின் பெயர் : பீச்சாங்கை
ஆசிரியர் :ப. சதீஸ் பிரபு
வெளியீடு : நாற்றுகள் பதிப்பகம்
விலை : ரூ.30/-
பக்கம் :96

புத்தக மதிப்புரை:

“ஒன்றாய் சாப்பிடுவோம் என்றழைக்க அப்பாவிற்கு உறுத்தவே இல்லையா? பரிமாறும் அம்மா’’ மனச்சாட்சி உறுத்தாத ஆணாதிக்கத்தை நோக்கி கேட்கும் சவுக்கடி கேள்வி இது…’’ எது சோத்தாங்கை எது பீச்சாங்கை மலம் அள்ளும் தோட்டிக்கு..? தன் கவிதைக்குள் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருக்கிறார் சதீஷ் பிரபு சபாஷ் பிரபு “செத்தும் சாகவில்லை சாதி கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்’’ இப்படி `நச்’ சென்று உறைக்கும் வரிகளோடு சமூகக் கொடுமைகளுக்கு எதிராக உறைவாளை உருவிய இளங்கவிஞர் இந்த கோபக்கனலை அணையாது காப்பாரா! எதிர் காலம் அவருக்கும் நமக்கும் ஆகுக!
-தீக்கதிர், புத்தக விமர்சனம்
- See more at:http://www.noolulagam.com/2011/03/23/982/#sthash.FpuZ9Qc3.dpufஆனந்த விகடன் 24.10.2012 

வார இதழில் "நானே கேள்வி நானே பதில்" என்ற பகுதியில் ஸ்டாலின் சரவணன் என்ற முகம் தெரியாத வாசகர் ஒருவர் படித்ததில் அறைந்தது என்ற பெயரில் என் "பீச்சாங்கை " கவிதையை கவிஞர் சதீஷ்பிரபு (யோவ்) எழுதிய ' மலம் அள்ளுபவனின் கைகளில் எந்தக் கை பீச்சாங்கை?' குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். 


''படித்ததில் 'அறைந்தது’?''
''கவிஞர் சதீஷ் பிரபு எழுதிய
மலம் அள்ளுபவனின் கைகளில்...
எந்தக் கை
பீச்சாங்கை?''
ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி
நானே கேள்வி... நானே பதில்!
ஆனந்த விகடன் (24.10.2012)


https://www.facebook.com/vikatanweb/posts/435675863157876 


மல்லிகை

இலங்கையிலிருந்து 50 ஆண்டுகளாக வெளிவரும் கலை இலக்கிய இதழான மல்லிகையில் இலங்கை தமிழ் எழுத்தாளர் மேமன் கவி அவர்கள் "ப.சதீஸ் பிரபு வின் "பீச்சாங்கை"அடக்குவோர் கன்னத்தில் அறையும் கை" எனும் தலைப்பில் விரிவான விமர்சனக் கட்டுரையை 2007 வெளிவந்த என் கவிதை தொகுப்பினை பற்றியும் அதற்கு பிந்தைய என் கவிதைகளை பற்றியும் எழுதியுள்ளார். ஒரு படைப்பாளன் மற்றொரு படைப்பாளனை பாராட்டுவதே அரிதான இந்த காலகட்டத்தில் என்னை போன்ற மிகச் சாதாரண மான ஒரு கவிஞனை தேடிப்பிடித்து பாராட்டுவதில் தீவிரம் காட்டிய திருMemon Kavi சாரின் அன்பு எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு முன் "வெட்டியான்" எனும் என் கவிதையை பற்றியும் "ஞானம்" எனும் இலக்கிய இதழில் விமர்சனம் எழுதியுள்ளார். மேலும் மகளிர் சிந்தனை பத்திரிக்கையால் தீர்க்கமான சமூகப் பார்வை என்றும் சாளரம் பத்திரிக்கையால் எழுச்சி மிக்க வரவு என்றும் பாராட்டப்பட்டு பல்வேறு அறிஞர் பெருமக்களால் இந்த கவிதை எடுத்தாளப்பட்டு ஒரு சமூகப் பிரச்சனையில் கூர்மையான குரலாக விளங்கிவருகிறது..

  இன்னும் இந்த சமூக அவலம் தொடர நாம் விடலாமா..?Download As PDF

Post Comment

Google+ Badge

To Receive Poems By E-mail

Notification


கன்னம் தளம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? தங்கள் வலைத்தளங்களின் இணைப்பு அதில் இடம்பெற வேண்டுமா?அப்படியென்றால் கீழ்க்காணும் கன்னம்.காம் இணைப்பினை உங்கள் தளத்தில் சேர்த்துவிட்டு உங்கள் வலைப்பதிவினைப்பற்றி இங்கே தகவல் அளிக்கவும் கன்னம்.காம் இணைப்புதர கீழுள்ளதை copy&paste in ur blog. blogspot க்கு கீழே box ல் உள்ள html நிரல் வரிகளை copy செய்து உங்கள் blog இன் dashbord சென்று design சென்று add a gadget சென்று HTML/JavaScript சென்று content என்ற box ல் சேர்த்து save கொடுக்கவும்
<a href="http://www.kannam.com/" target="_blank"><img src="http://i1112.photobucket.com/albums/k486/yohkavithaigal/hai3.png" border="0" alt="kannam.com" /></a>
kannam.com